
அனாதை ஜீவனாய் நான்!
என் உயிரோடு உறவாடி…
என் உணர்வோடு கலந்து…
எனை அரவணைத்துக் காக்க
உன்னை விட்டால்
எனக்கென யாருள்ளார் இவ்வுலகில்…?
உன் அன்பு மழைத்துளி ஒன்று
என்மேல் விழாதா என
ஏங்கித் தவித்து
அன்புப் பிச்சை கேட்கும்
அனாதை ஜீவனாய் நான்!
உங்களோடு வலம் வரும்
*** இவள் – சத்தியா ***
சின்னா சொன்னது,
நவம்பர் 17, 2007 இல் 8:08 மு.பகல்
ஹை சத்தியா… நிலாத் தூறல் என்றால் என்ன அற்த்தம்…. இவைகளும் கவிதைகள் தானே இவைகள் தொடர்சியாக வருகின்றன் ஆனால் தலைப்புகள் மட்டும் வெவ்வேறாக இருக்கின்றனவே….
சத்தியா சொன்னது,
நவம்பர் 18, 2007 இல் 1:03 பிற்பகல்
ம்ம்… இவைகளும் கவிதைகள்தான் சின்னா. ”நிலாத் தூறல்” என்பது நிலா முற்றத்தில் தூறிய கவிதைத் தூறல்கள். அதாவது முற்றத்தில் உலாவிய உறவுகளையும் கவிதைகள் எழுத
வைக்க எடுத்த முயற்சியாகும்.
அதாவது… நான் இணைக்கும் படத்திற்கு அவர்கள் மனதில் தோன்றும் வரிகளை எழுத வேண்டும்.
ஒவ்வொரு கவிதைக்குக் கீழேயும் அதன் லிங்கைக் கொடுத்திருக் கின்றேன் அல்லவா? அவற்றினூடு சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கும் புரியும் சின்னா.
சின்னா சொன்னது,
நவம்பர் 18, 2007 இல் 6:20 பிற்பகல்
முன்பு அங்கு பார்த்தேன் ஒன்றும் புரியவில்லை இப்போதான் விளங்கியது… இந்த நல்ல முயர்சியை ஏன் நிறுத்திவிட்டீர்கள்…??
நன்றி சத்தியா…
சத்தியா சொன்னது,
நவம்பர் 18, 2007 இல் 9:33 பிற்பகல்
ஓ அதுவா சின்னா… கவிஞர்களின் பங்களிப்புக்கள் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. ஆகவே 26 தூறல்களோடு
நிறுத்தி விட்டேன்.
இதயநிலா சொன்னது,
பெப்ரவரி 12, 2009 இல் 4:20 பிற்பகல்
வணக்கம் சத்தியா கவிதைகள் இரசனை பூக்கின்றன இதயநிலாவின் வாழ்த்துக்கள்…