எழுது! ….. எழுது!
————————-
எழுது ….. எழுது!
ஒரு கவிதை எழுது!
எனக்காக – நீ
ஒரு கவிதை எழுது!
ம்…!
என்னை மட்டும் நேசிப்பதாய்
எழுதாவிடிலும் பரவாயில்லை
என்னையும் நேசிப்பதாய்
ஒரு கவிதை எழுது!
அழுது அழுது
தூர்ந்த என் விழிகளுக்கு – ஓர்
ஆறுதலாய் நாலு வார்த்தை!
பழுவினைச் சுமந்து சுமந்து
சோர்ந்த என் இதயத்துக்கு
இதமாக இரண்டு வார்த்தை!
எழுது! ….. எழுது!
ஒரு கவிதை எழுது!
எனக்காக – நீ
ஒரு கவிதை எழுது!
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3881&st=0#entry48386
*** இவள் – சத்தியா ***



பிரியா சொன்னது,
மே 5, 2007 இல் 8:46 மு.பகல்
//என்னை மட்டும் நேசிப்பதாய்
எழுதாவிடிலும் பரவாயில்லை
என்னையும் நேசிப்பதாய்
ஒரு கவிதை எழுது!//
நல்ல வரிகள்
என்னை நேசிப்பதாய்
எழுதாவிடிலும் பரவாயில்லை
என்னை நேசிக்கவில்லை
என்றாவது எழுது