விதி வரைந்த கோலங்கள்-6
தொடர்ந்து அழுகையும், சோகமுமாய் கரைந்த காலங் களிலிருந்து மீண்டுவிடும் எண்ணத்தோடு… மனதில் ஓர் திடத்தை வரவழைத்துக் கொண்டாள் சாந்தி. அண்ணனின் உதவியுடன் ஓர் வேலை ஒன்றையும் தேடிக் கொண்டாள்.
காலங்கள் காற்றாய் கரைய… மாதங்கள் சில கழிந்தன. தன் உழைப்போடு தனக்கான ஓர் றூமையும் தேடி எடுத்துக் கொண்டாள். ம்… இப்போது சாந்தி தன் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கினாள்.
இனிமேலும் தனக்கு நடந்த பிரச்சனைகளை தன் பெற்றோருக்குச் சொல்லாமல் மறைத்து வைத்திருப்பது நல்லதல்ல என நினைத்து… நடந்தவற்றை எல்லாம் விபரமாக மடலில் எழுதி அனுப்பி வைத்தாள்.
அங்கிருந்து வந்த பதில் கடிதம் அவள் நெஞ்சை நெரு ஞ்சி முள்ளாகக் குத்தி… அவளை மேலும் வேதனைக் கடலில் ஆழ்த்தியது.
சாந்தியின் கடிதத்தை வாசித்ததிலிருந்து அவளின் அம்மா நாளும் அழுதழுது…”தமது பிள்ளையின் வாழ் வைத் தாமே பாழாக்கி விட்டோமே”… என வேதனை யில் மூழ்கி… ஓர் நாள் அம்மா மயங்கி விழுந்ததா கவும், பின் அம்மாவை மருத்துவமனையில் அனும தித்து இருந்ததாகவும், அதன் பின்னர் அம்மா பேச்சு மூச்சின்றி பித்துப் பிடித்தது போல் அப்படியே படுக்கை யில் விழுந்து விட்டதாகவும்… அவளின் தந்தையார் வேதனையோடு எழுதி இருந்தார்.
கடிதத்தை வாசித்து முடித்த போது அவளுக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது. குழறிக் குழறி அழுதாள்…
போன ஜென்மத்தில் நான் ஏதோ பாவம் செய்திருக் கிறேன் போல் இருக்கிறது. அதுதான் எப்ப பார்த்தாலும் என்னைத் தொடர்ந்து வேதனைகள் விரட்டி வருகி றதே… துரத்தி வரும் கஷ்டத்தையும், சோகத்தையும் பார்த்தால் வாழ்க்கையே வெறுத்துப் போகிறதே. என்னால் எதையும் தாங்கிக் கொள்ள முடியவில் லையே… இனிமேலும் எதற்காக நான் உயிரோடு வாழ வேண்டும்?… என்று வெறுப்பும் ஏற்பட்டது.
சாந்தி தனிமையில் இருந்து தேம்பித் தேம்பி அழுதாள். உடனடியாக தாயைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு… ஆனாலும் அதுவெல்லாம் நினைத்தவுடன் நடக்கக் கூடிய காரியமா என்ன?
ஒரு கணம் தன் பெற்றோரையும், தன் தங்கைமா ரையும் நினைத்துப் பார்த்தாள். அவர்களுக்கு தன்னை விட்டால் இனி யார் இருக்கிறார்கள்?… அத்தோடு அவள் வரும் போது, அவர்களுக்கென இருந்த ஒரு வீட்டையும், தோட்டக் காணியையும் அடகு வைத்து அப்பா காசு கொடுத்ததும்…அவற்றை எல்லாம் மீட்டு எடுக்கும் பொறுப்பும் இப்போது தன்னிடமே உள்ளது எனவும் எண்ணிக் கொண்டவளும்… தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, தொடர்ந்து வாழ்க்கையோடு போராடத் தொடங்கினாள்.
போராட்டம்… போராட்டம்… நாளும் போராட்டம்… போராடிப் போராடி தன் பொறுப்புக்களை எல்லாம் முடித்த வேளையில்…
ஓர் நாள் அவளின் தோழி… தனக்குத் தெரிந்த ஒருவர் இருப்பதாகவும்… அவரைத் திருமணம் செய்து கொள் ளும் படியும், சாந்தியிடம் கேட்டாள். ஆனால் சாந்தி அதனை மறுத்து… தனக்கு இனிமேல் திருமணமே வேண்டாம் என மறுத்தாள்.
“நான் ஒரு முறை பட்டது போதும்… இனிமேல் கல்யா ணம், காட்சி எதுவுமே எனக்கு வேண்டாம்… வாழ்க்கை பூராகவும் இப்படியே தனியே வாழ்ந்து விட்டுப் போகின் றேன்”… எனச் சொல்லி மறுத்த போதும்…
அவள் தோழியும் விடவில்லை. அவள் அண்ணனும் விடவில்லை.
“இப்படியே தனியே இருந்து என்ன செய்யப் போகிறாய்? வாழ்க்கையில் உனக் கென்றொரு துணை வேண் டாமா? இப்படியே எத்தனை காலத்துக்குத்தான் உன் னால் தனியே வாழ முடியும்? நாளை உனக்கு ஒரு வருத்தம் துன்பம் என்றாலும் சாய்ந்து கொள்ள ஓர் தோள் வேண்டாமா?”… எனத் தொடர்ந்து அவளுக்குப் புத்தி சொல்லி… ஒருவாறு சாந்தியை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்த போது… தானும் ஒரு தடவை தேவ னுடன் தனிமையில் கதைத்து முடிவைச் சொல்வ தாகச் சொன்னாள்.
பின் ஓர் நாள் சாந்தி தேவனைச் சந்தித்து நடந்த சம்பவங்கள் யாவற்றையும் நேரடியாகக் கூறினாள்…
அதுவெல்லாம் தனக்குப் பிரச்சனை இல்லை என்றும்… தான் அமைதியான ஓர் பெண்ணை மட்டுமே எதிர்பார்ப் பதாகவும் தேவன் கூறி… தானும் ஏற்கனவே திரும ணம் முடித்து மனைவியை இழந்து இருப்பதாகவும் கூறினான்.
“நிதமும் மணிக்கணக்கில் வேலை பார்த்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது… என்னத்துக்கு இந்த வாழ்க்கை என்று வெறுத்துப் போகிறது. எனக்காக அழவும், எனக்காகச் சிரிக்கவும் யாராது ஒரு ஜீவன் இருந்தால் நானும் உயிரோட இருக்கிறதுக்கு ஒரு அர்த்தம் கிடைக்குமில்லையா? அப்பிடி ஒரு ஜீவனா உங்களால இருக்க முடியுமா தேவன்?… என் மனம் திறந்து நானும் ஒரு நாலு வார்த்தை உங்களிடம் பேசி நிம்மதியா வாழ முடியுமா?”…
“ம்… எனக்கு இதுதான் வேணும். உங்களுக்கும் இதில் உடன்பாடு இருந்தால் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்”.. என தன் மனதைத் திறந்து எல்லாம் சொல்லி முடித்தாள் சாந்தி.
தேவனுக்கும் சாந்தியைப் பிடித்துக் கொண்டது. பின் ஒரு நல்ல நாளில்… அமைதியான முறையில்… கோயி லில் வைத்து தாலியைக் கட்டி கொண்டு… குடும்ப வாழ்க்கைக்குள் இருவரும் காலடியை எடுத்து வைத்தார்கள்.
குடுப்பச் சக்கரம் எந்த வித சிக்கலும் இன்றி இனிதே தொடர்ந்தது. இருவரின் இனிய இல்லற வாழ்வின் அடையாளமாய் சாந்தி தாய்மையடைந்தாள்.
ஆசைக்கும், ஆஸ்திக்குமாய் முதலில் ஓர் மகனும், அதன் பின்னர் ஓர் மகளும் பிறந்து சந்தோசமாய் குடும்பம் வாழ்ந்த வேளை….
அன்றும் வழமை போலவே… காலையில் எழுந்து வேலைக்குப் போனான் தேவன். மதிய வேளை… தேவன் வேலை செய்யும் இடத்திலிருந்து சாந்திக்கு ஓர் தொலைபேசி அழைப்பு வந்தது.
வேலை செய்து கொண்டு நிற்கும் போது… திடீரெனத் தேவன் மயங்கி விழுந்து விட்டதாகவும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“கடவுளே!… இது என்ன சோதனை?… என் கணவருக்கு எதுவுமே ஆகிவிடக் கூடாது”… என ஆண்டவனை மன்றாடியபடி மருத்துவமனையை நோக்கி ஓடினாள்.
சாந்தி. அங்கே சென்று மருத்துவமனை வாசலில் … அவசர அவசரமாய்… தேவனின் பெயரைச் சொல்லி விசாரித்த போது…
அங்கே அவர்கள் கொடுத்த றூம் நம்பரைத் தேடி ஓடினாள் சாந்தி…
ஓடிச் சென்று அந்த றூம் கதவைத் தட்டி உள்ளே சென்ற போது… உள்ளே நின்ற டாக்ரர்…. யார் என வினாவ…
“நான்தான் தேவனின் மனைவி”… எனச் சொல்லி… தேவனுக்கு என்ன நடந்தது விசாரித்த போது…
தேவனுக்கு வந்தது காட்டரைக் எனவும்… மருத்துவ மனைக்கு கொண்டு வரும் வழியிலேயே அவன் இறந்து விட்டதால்… அவனைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதாகவும் டாக்ரர் கூறியதைக் கேட்டதும் ….
“ஐயோ… கடவுளே!…. என கதறியவாறு…. சுவரில் தன் தலையை மோதி மோதிக் கதறினாள் சாந்தி.
முடியவில்லை… அவளால் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கதறினாள்… கதறினாள்… தன்னால் ஆன மட்டும் கத்திக் கத்திக் கதறினாள். யாரின் தேற்றல்களும் அவள் காதில் விழவில்லை. அழுதாள்… அழுதாள்… அவளால் ஆனமட்டும் கத்திக் கத்தி அழுதாள்.
தொடர்ந்து இடிக்கு மேல் இடி என்றால் அவள் எப்படித்தான் தாங்கிக் கொள்வாள்? சாந்தி என்ற பெயரை அவள் வைத்திருந்த போதும்… இது வரை அவள் அமைதியாய் வாழ்ந்தாளா?
தன் மனதின் சோகம் முடியும் மட்டும் கதறி அழுதழுது ஓரளவு ஓய்ந்த போது… அவளின் தோள்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுத அவளின் இரண்டு செல்வங் களின் அழுகையையும்… அவர்களின் கோலத்தையும கண்ட போது… பெற்ற அந்தத் தாயுள்ளம் ஓர் கணம் துடித்தது. தன் பிள்ளைகள் இரண்டையும் நெஞ்சோடு அணைத்தவாறு அமைதியானாள்.
தேவனின் தகனக்கிரியைகள் யாவும் முடிந்தன. மூன்று வருடம் அமைதியான வாழ்வைக் கொடுத்த அந்த அன்பு ஜீவனைக் கண்ணீரோடு வழியனுப்பி வைத்தாள்.
அழுதழுது… இனி அழுவதற்குக் கூட திராணியற்ற வளாய் துவண்டு போனவளின் மனதில் எண்ண அலைகள் உக்கிரம் கொண்டு திமிறின.
சற்று நேரத்துக்கு முன் மனமொடிந்து வீழ்ந்து போயி ருந்த சாந்தி இப்போ திடம் கொண்டு எழுந்தாள். இனி யும் தான் உயிரோடு வாழ வேண்டும் என முடிவெடுத்தாள்.
ம்… வாழ்கிறாள் இப்போதும் சாந்தி உயிரோடு வாழ்கி றாள். அது அவளுக்காக அல்ல. அவள் பெற்றெடுத்த இரண்டு அன்புச் செல்வங்களுக்காக!
முற்றும்!
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4759

K. MATHURAVALLI சொன்னது,
ஜூன் 13, 2008 இல் 5:46 நான்
Kathai Asiriyarukku Vanakkam,
Indhak kathai rombha rombha nandraga irundhadu. Shanthiyinudaiya Vazhkai pool yarukkum amaiyakudadu. Rombha kodumai. Analum Ippadipatta Vazhkai Anubhavipavargal Nirayapper Irukkirargal. Manathai Urukiya Arumaiyana Kathai. Nandri.
K. Madhu.
சத்தியா சொன்னது,
ஜூன் 13, 2008 இல் 8:59 பிற்பகல்
ம்… உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்…
மிக்க நன்றி மது.