நிஜமான நேசம் கொண்டு
உனை நெஞ்சார நேசித்தேன்…!
நீதான்
உண்மையான நேசம் தன்னை
உணராமல் செல்கின்றாய்…!
சரி விடு…
கற்பக் கிரகத்துள்
இருக்கும் கடவுளை
கட்டித் தழுவியா
வணங்க முடியும்…?!
எட்டி நின்றுதானே
எப்போதும் வணங்குகிறோம்…?
அது போலவே
எட்டி இருந்தபடியே
உன்மேலான
பிரியங்களை எல்லாம்
என்றும் பிரியாமல்
என் நெஞ்சுக்குள்ளேயே
வளர்த்துக் கொள்கிறேன் நான்…!
நிசப்தம் – சத்தியா
*** இவள் – சத்தியா ***
